செயல்படு; செலவு செய்; விலகி இரு!
அண்ணல் நபிகளார் (ஸல்) நவின்றார்கள்: "கற்றதற்கேற்ப செயல்பட்டவனுக்கும்தன்னுடைய தேவைகள் போக எஞ்சியதை (இறைவழியில்) செலவுசெய்தவனுக்கும் தேவையற்ற பயனற்ற பேச்சுக்களிலிருந்துமசெயல்பாடுகளிலிருந்தும் விலகி இருந்தவனுக்கும் நற்செய்தி இருக்கிறது."
அறிவிப்பாளர்: ரகப் மிஸ்ரி (ரலி)
நூல்: தப்ரானி
விளக்கம்
இந்த நபிமொழியில் மூன்று விஷயங்கள் குறித்து சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அண்ணல் நபிகளார்(ஸல்) முன்று வகையான நபர்களுக்கு நற்செய்தி அறிவித்துள்ளார்.
முதலாமவர், தான் கற்றுக் கொண்டதற்கேற்ப செயல்படும் பண்பு கொண்டவர். இன்று அறிவுக்குப் பஞ்சம் கிடையாது. செயலுக்குத் தான் பற்றாக்குறை காணப்படுகிறது. Knowledge explosion என்கிற அறிவுப் புரட்சி வெடித்திருக்கிற யுகம் இது.
இந்த அறிவு யுகத்தில் மார்க்க அறிவு, மார்க்கத்தைப் பற்றிய தகவல்கள் கூட எல்லாருக்கும் மிகத் தாராளமாகவே கிடைக்கிறது...! எத்தனை பத்திரிகைகள்..! எத்தனை வலைத் தளங்கள்..! எத்தனை எத்தனை நூல்கள்..! தொலைக் காட்சி நிகழ்ச்சிகள்..!
இதன் காரணமாக 'சோதனை' கூட கடுமையாகிவிட்டது. தீமை எது? நன்மை எது? எதனைச் செய்ய வேண்டும்? எதிலிருந்து விலகி இருக்க வேண்டும்? எல்லோருமே அறிந்திருக்கிறார்கள்.
ஆனால் அறிவு மட்டும் போதாது. அறிவாளிகளுக்கு நற்செய்தி அளிக்கப்படவில்லை. கற்றதற்கேற்ப செயல்படுபவருக்கே நற்செய்தி சொல்லப்பட்டிருக்கிறது.
அடுத்ததாக நற்செய்தி சொல்லப்பட்டிருப்பவரின் சிறப்பு என்னவெனில் அவர் தன்னுடைய தேவைகளுக்கு அதிகமாக எஞ்சி இருக்கும் பொருளை இறைவனின் வழியில் செலவிடக் கூடியவராக இருப்பார்.
எது தேவை? எது ஆடம்பரம்? இந்த இரண்டையும் பிரிக்கின்ற எல்லைக் கொடு எது? நிர்ணயிப்பது கடினம். கொஞ்சம் சிக்கலான நுணுக்கமான பிரச்னை தான்.
எல்லோருமே தத்தமது வாழ்க்கைத் தரத்துக்கேற்ப தத்தமது தேவைகளை நிர்ணயிக்கின்றார்கள். ஆனால் தேவைக்கு அதிகமாக ஒருவரிடம் எத்துணை பொருள் இருக்கிறது என்பதை மற்றவர்களால் நிர்ணயிக்க முடியாது. ஒவ்வொருவரும் சுயமாக அதனை நிர்ணயித்துக் கொள்ளவது தான் நல்லது.
தங்கள் வலைப்பக்கத்தில் எனது பக்கத்திற்கு இணைப்பு அளித்து இருப்பதைக் கண்டேன். தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. மனிதர்களுக்கு நன்றி உரைக்காதவன் இறைவனுக்கு நன்றுயுரைக்காதவனாகிறான் என்ற அண்ணல் நபிகளின் பொன்மொழியை நினைவு கூறுகிறேன்.
பதிலளிநீக்குஅப்துல்லா
தங்களின் வருகைக்கு நன்றி..! தொடர்ந்து தொடர்பில் இருப்போம்..! இன்ஷா அல்லாஹ்..!
பதிலளிநீக்கு