பக்கங்கள்

திங்கள், 16 ஜூன், 2008

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே !

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே !
இது தான்என்னுடைய முதல் தமிழ் போஸ்ட்
சனிக்கிழமை மதுரை சென்று இருந்தேன்
மதுரையில் ஜமாத் ஊழியர்களின் முகாம்.
நிகழ்ச்சிகள் எல்லாமே திட்டமிட்ட முறையில் நடந்தன....!
சகோதரர் அப்பாஸ் சிறப்பாக குரான் விரிவுரை நிகழ்த்தினார். சுய மதிப்பீடு சைய்வதன் முக்கியத்துவத்தை அருமையாக படம் பிடித்து காட்டினார். உண்மையிலே நிறைவாக இருந்தது. என்னுடைய தலைப்பும் சுய மதிப்பீடு தான்... என்றாலும்....
அடுத்து தர்பியத்தின் அவசியம் குறித்து முஸதபாஃ பேசினார்.
இமாம் கஜ்ஜாலி சொன்ன உவமையை என்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்தேன்.அந்த உவமை தான் எல்லாரையும் கவர்ந்தது. அதனை மட்டும் இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இமாம் கஜ்ஜாலி சொன்னார்
நம்முடைய மனதின் நிலைமை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமெனில் கடிகாரத்தின் பெண்டுலம் போல அது இருக்க வேண்டும்.
பெண்டுலம் இடது வலது , இடது வலது, இடது வலது, இடது வலது என ஆடிக் கொண்டே இருக்கிறது அல்லவா! அதைப் போன்றே நம்முடைய மனமும் நம்பிக்கை, அச்சம் ஆகியவற்றுக்கு இடையே அலை பாய்ந்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ நம்முடைய அமல்களை ஏற்றுக் கொள்வான் என்கிற எதிர்பார்ப்பு மனதை சந்தோஷப் படுத்த வேண்டும், அடுத்த கணமே அவன் எல்லாவற்றையும் ஒதுக்கி தள்ளி விட்டு தண்டித்து விடுவானோ என்கிற அச்சம் நம்மை வதைக்க வேண்டும்
எதிர்பார்ப்பு, அச்சம், மகிழ்ச்சி, வேதனை, எதிர்பார்ப்பு, அச்சம், மகிழ்ச்சி, வேதனை என்கிற ரீதியில் மனம் அலை பாய வேண்டும் என்றார் இமாம் கஜ்ஜாலி.

உங்களுடைய நிலைமை எப்படி இருக்கிறது?

1 கருத்து:

  1. அஸ்ஸ‌லாமு அலைக்கும். தங்கள் வலைப்பக்கத்தைப் பார்வை இடும் வாய்ப்பு இன்று தான் கிடைத்தது.

    //சனிக்கிழமை மதுரை சென்று இருந்தேன்
    மதுரையில் ஜமாத் ஊழியர்களின் முகாம்//

    நானும் மிக அதிகம் ஜமாத்துகளில் சென்று இருக்கேன்.எழுதத் துவங்கிய நீங்க ஏன் நீண்ட நாட்களாக புதிதாக எதுவும் எழுதாம இருக்கீங்க? தொடர்ந்து எழுதுங்க...மனிதம் சார்ந்து எழுதுங்க. இன்றைய இஸ்லாமிய எழுத்தாளர்கள் செய்யவேண்டிய முதல் பணியாக நான் நினைப்பது மனித நேயத்திலும், மதநல்லிணக்கத்திலும் உலகில் வேறு எவருக்கும் நாம் சளைத்தவர்கள் அல்ல என்பதை நம்மீது மீடியாக்களால் தவறான புரிதலில் இருக்கும் பிற சமூக சகோதரர்களிடம் உணர வைப்பதுதான்
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு

LinkWithin

Blog Widget by LinkWithin