பக்கங்கள்

செவ்வாய், 24 ஜூன், 2008

சிந்திக்க... சிந்திக்க....

அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடைய அல்லாஹ்வின் பெயரால்

பூமி வறண்டுகிடப்பதையும் நீர் காண்கிறீர். அதில் நாம் மழையைப் பொழிந்தவுடன் அது சட்டென்று உயிர் பெறுவதையும் தழைத்தோங்குவதையும் நீர் காண்கிறீர். இது அல்லாஹ்வின் சான்றுகளில் ஒன்றாகும். திண்ணமாக, இறந்துவிட்ட இப்பூமிக்கு எந்த இறைவன் உயிரூட்டினானோ அந்த இறைவன், இறந்தவர்களுக்கும் உயிரூட்டக்குடியவன் ஆவான். திண்ணமாக, அவன் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றல் கொண்டவன் ஆவான்.
குர்ஆன்41: 39

புதன், 18 ஜூன், 2008

பொறுமை.. பொறுமை... பொறுமை...

அந்த செய்தியை படித்ததும் அதிர்ந்து போனேன்.
சென்னையின் முக்கியமான ஜன நெருக்கடி மிகுந்த பகுதியில் நடந்த கொலை பற்றிய செய்தி அது..!
நாட்டிலேயே அறிவிலும் ஆற்றலிலும் தலை சிறந்தவர்களாக எல்லாராலும் தூக்கி வைத்துக் கொண்டாடப்படுகின்ற சமுதாயத்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற, படித்தவர்கள் அதிகமாக வாழ்கின்ற பாரம்பர்யமான நடந்த கொலை அது..!
கொலையை செய்தவர் ஒரு பெண்மணி. இல்லத்தரசி. பள்ளியில் படிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு தாய்.
கொல்லப்பட்டவரும் ஒரு பெண்மணி. குடும்ப பெண்மணி. ஐந்து மகன்களையும் இரண்டு மகள்களையும் பெற்றெடுத்து வளர்த்து ஆளாக்கி பேரன்களையும் பேத்திகளையும் கொஞ்சி மகிழ்ந்து காலத்தை போக்கி வந்த வயதான பெண்மணி..!
இரண்டு பேர்களுமே நெருங்கிய உறவினர்கள் தான். மாமியார் மருமகள் உறவு..!

திங்கள், 16 ஜூன், 2008

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே !

எல்லா புகழும் அல்லாஹ்வுக்கே !
இது தான்என்னுடைய முதல் தமிழ் போஸ்ட்
சனிக்கிழமை மதுரை சென்று இருந்தேன்
மதுரையில் ஜமாத் ஊழியர்களின் முகாம்.
நிகழ்ச்சிகள் எல்லாமே திட்டமிட்ட முறையில் நடந்தன....!
சகோதரர் அப்பாஸ் சிறப்பாக குரான் விரிவுரை நிகழ்த்தினார். சுய மதிப்பீடு சைய்வதன் முக்கியத்துவத்தை அருமையாக படம் பிடித்து காட்டினார். உண்மையிலே நிறைவாக இருந்தது. என்னுடைய தலைப்பும் சுய மதிப்பீடு தான்... என்றாலும்....
அடுத்து தர்பியத்தின் அவசியம் குறித்து முஸதபாஃ பேசினார்.
இமாம் கஜ்ஜாலி சொன்ன உவமையை என்னுடைய உரையில் குறிப்பிட்டிருந்தேன்.அந்த உவமை தான் எல்லாரையும் கவர்ந்தது. அதனை மட்டும் இங்கு உங்களோடு பகிர்ந்து கொள்கிறேன்.
இமாம் கஜ்ஜாலி சொன்னார்
நம்முடைய மனதின் நிலைமை எப்படிப்பட்டதாக இருக்க வேண்டுமெனில் கடிகாரத்தின் பெண்டுலம் போல அது இருக்க வேண்டும்.
பெண்டுலம் இடது வலது , இடது வலது, இடது வலது, இடது வலது என ஆடிக் கொண்டே இருக்கிறது அல்லவா! அதைப் போன்றே நம்முடைய மனமும் நம்பிக்கை, அச்சம் ஆகியவற்றுக்கு இடையே அலை பாய்ந்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ நம்முடைய அமல்களை ஏற்றுக் கொள்வான் என்கிற எதிர்பார்ப்பு மனதை சந்தோஷப் படுத்த வேண்டும், அடுத்த கணமே அவன் எல்லாவற்றையும் ஒதுக்கி தள்ளி விட்டு தண்டித்து விடுவானோ என்கிற அச்சம் நம்மை வதைக்க வேண்டும்
எதிர்பார்ப்பு, அச்சம், மகிழ்ச்சி, வேதனை, எதிர்பார்ப்பு, அச்சம், மகிழ்ச்சி, வேதனை என்கிற ரீதியில் மனம் அலை பாய வேண்டும் என்றார் இமாம் கஜ்ஜாலி.

உங்களுடைய நிலைமை எப்படி இருக்கிறது?

LinkWithin

Blog Widget by LinkWithin